Break your Phone Addiction Tamil
என்ன பிரச்சினை எனக்கு வந்தாலும் அம்மா உடனே சொல்ற ஓரே வசனம் எந்த நேரமும் அந்த தொலைபேசியை கிண்டி கொண்டு இருந்தால் அப்படி தான் நடக்கும் என்பது தான், எனக்கு மட்டுமல்ல எங்களில் அனேகம் பேருக்கு இந்த அனுபவம் இருக்கும் ஆனாலும் அம்மா என்ன தான் சொன்னாலும் எங்களுக்கு கைத்தொலைபேசியை நிமிடத்திற்கு ஒரு தடவை கிண்டி பார்க்காமல் இருக்கவே முடியாது. உங்களிற்கு இன்னொரு தகவலும் இந்த நேரத்தில் பகிரலாம் என நினைக்கிறேன் சராசரியாக ஒரு நாளில் நாங்கள் 3 1/2 மணித்தியாலங்களை தொலைபேசியை பயன்படுத்துவதில் கழிக்கின்றோம், கழிக்கின்றோம் என்பதை விட தொலைக்கின்றோம் என்பது தான் மிக பொருத்தமாக இருக்கும் தூக்கம் கலைந்து முதல் பார்ப்பதும் நித்திரைக்கு போகும் போது இறுதியில் பார்ப்பதும் என்னவோ உன்னை தான்.என்ன இடையில் காதல் கவிதை மாதிரி வருகிறது என நினைக்க வேண்டாம் எங்களுக்கும் கைத்தொலைபேசிக்கும் இடையில் உள்ள உறவு அப்படி. அம்மா நச்சரிக்கும் ஒவ்வொரு நேரமும் நானும் கைத்தொலைபேசி பாவனையிலிருந்து விடுபட வேண்டும் என்று நினைப்பேன் ஆனாலும் கூடியது அரை மணி நேரம் வரை தான் தொலைபேசியை தவிர்க்க முடியுமாக இருந்தது. அதற்கு பின்பு பல...