Mr.Bean Story in Tamil

  Mr.Bean

ஒரு மண்ணிற கரடி பொம்மையை பார்த்ததும் ஞாபகம் வருவது Mr.Bean உடைய முகமும் அவரது முகபாவனை நகைச்சுவையுமே. ஆனால் இந்த கதாபாத்திரம் உருவானது எப்படி என்று தெரியுமா?
தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருந்தால் தொடர்ந்து வாசியுங்கள். Rowan Atkinson எனும் இயற்பெயருடையவர் தான் Mr.Bean. அவர் ஒரு பொறியியலலாளர் ,ஆச்சரியமாக இருக்க? Oxford பல்கலைக்கழகத்தில் பொறியியலில்(Electrical Engineering) முதுமாணி பட்டம் பெற்றவர் தான் Mr. Bean அத்துடன் அவரது நடிப்பு பயணத்தின் ஆரம்ப தளமாகவும் அவரது பல்கலைக்கழக வாழ்க்கை அமைந்துள்ளது. தற்போது எங்களை சிரிக்க வைத்துக்கொண்டிருக்கும் Mr.Bean பள்ளி,கல்லூரி காலங்களில் நகைச்சுவை குணமுள்ள ஒருவராக இருக்கவில்லை மாறாக கூச்ச சுபவமுடைய ஒருவராக இருந்தார்.அவரது தோற்றம் மற்றும் பேச்சு முறை ஆகியவற்றால் சகபாடிகளால் கேலிக்கும் கிண்டலுக்கும் தொடர்ச்சியாக ஆளானார். வேற்று கிரக வாசி என்று கூட நண்பர்கள் அவரை கிண்டல் செய்வார்களாம் மேலும் அவருக்கு கற்பித்த ஆசிரியர் கூட உன்னிடம் ஒரு விஷேட திறமை கூட இல்லை என்று கூறி அவரை காயப்படுத்தியிருந்தாராம். (யாரையும் குறைத்து மதிப்பிடாதீர்கள் எல்லோரிடமும் ஏதோ ஒரு திறமை இருக்கிறது என்பது Mr.Bean வாழ்க்கையிலிருந்து புலனாகிறது)

பல்கலைக்கழக வாழ்க்கை காலத்தில் எங்கட சனங்களை போல படிப்பிலே எதிர்பாலினத்திலோ காதல் கொள்ளாமல் நடிப்பின் மீது தீவிர காதல் கொண்டார் ஆனாலும் அவரது பேச்சு முறையினால் நடிப்பு வாய்ப்புக்களில் நிராகரிக்கப்பட்டார். இருப்பினும் நிராகரிப்புக்கள் எவையும் அவரை துவண்டு விட செய்யவில்லை. நடிப்பதற்காக தொடர்ச்சியான முயற்சியில் ஈடுபட்டிருக்கும் போது தன்னை தவிர்த்து வேறு ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கும் போது தன்னால் சரளமாக பேச முடிவதை அறிந்து கொண்டார். இத்தன்மை ஒரு புத்துணர்வு கொடுத்ததுடன் ஓர் நகைச்சுவை குழுவிலும் அவரால் இணைய வாய்ப்பாக அமைந்தது .திறமையான நடிப்பை வெளிப்படுத்தினாலும் அவரது பேச்சு முறையினால் அங்கும் அவர் நிராகரிக்கப்பட்டார். 

நினைத்த படி எதுவும் நடக்கவில்லை. நடிப்பு மற்றும் நிஜ வாழ்க்கையிலும் பல இன்னல்களையும் இடர்பாடுகளையும் எதிர்நோக்கினார், அப்போது கூட நடிப்பில் கொண்ட தீரா காதல் துளியும் குறையவில்லை. நடிப்பதற்காக புதிய பாதையை அமைத்து கொண்டார், வானொலி நகைச்சுவையை தேர்ந்தெடுத்து 10 வருடங்களாக வெறும் குரல் மூலம் மட்டுமே தான் திறனை வெளியிட்டவர் Mr.Bean எனும் கதாபாத்திரத்தினை செதுக்க ஆரம்பித்தார். நடிப்பு மீது கொண்ட தீவிர காதல் மற்றும் தொடர் முயற்சியும் Mr.Bean கதாபாத்திரத்தினை தொலைக்காட்சிக்கு கொண்டுவந்து இன்று உலகம் முழுமையாக சிரிக்க வைக்கிறது. அவரது வெற்றிக்கு காரணமாக அமைந்தது கடந்த காலங்களில் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டு வர்த அவரது தோற்றம் மற்றும் பேச்சு முறையுமே ஆகும்.

அவர் Mr.Bean கதாபாத்திரத்தினை உருவாக்கிய ஒரு புத்திசாலி மட்டுமல்ல எங்களுக்குள் இருக்கும் இயற்கையான குணவியல்புகள் மூலம் முன்னேற முடியும் என்பதற்கு சிறந்த உதாரணம் ஆவார். வாழ்க்கைல நிறைய பேர் பல வேறு காரணங்களுக்காக எங்களை பாதாளத்தில் வீழ்த்துவார்கள். எங்கள் வாழ்க்கையில் எங்கள் குணவியல்புகள் மூலம் எப்படி முன்னேற முடியும் என்று நாங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். 
தீவிரமாக காதலியுங்கள்,முயற்சி செய்யுங்கள் உங்களது இலக்குகளை இலட்சியங்களை.

அது Mr.Bean இன் கதை. 


Comments

Popular posts from this blog

Kitkat Story in Tamil

Break your Phone Addiction Tamil