Kitkat Story in Tamil
கிட்கட்

கிட்கட் பிடிக்காத ஆட்கள் இல்லை என்று சொல்லலாம். எழுதுகிற எனக்கே கிட்கட் மேல அவ்வளவு காதல் இருந்தாலும் அதனுடைய வரலாறு பற்றி ஏதுவும் தெரியாது. அட வரலாறா முக்கியம் வாய்க்கு இதமா இருக்கு என்று நீங்கள் சொல்லுவது நல்ல ஓசையாக காதில் விழுகிறது. அதன் வரலாறு பற்றி எனக்கு தெரிந்தவற்றை உங்களிடம் பகிர்கிறேன்.
கிட்டதட்ட 17ம் நூற்றண்டிலேயே ஆரம்பிக்கப்பட்டு விட்டது..ஓம் எங்கட தாத்தா பாட்டி காலத்து ஆள் தான் கிட்கட்.
கிட்கேட் மற்றும் கிட்கட் எனும் பெயர்கள் Rowntrees கம்பனியால் 1911 இல் வர்த்தகநாமமாக்கப்பட்டது.முதல் முதலில் kitkat என்ற எண்ணக்கருவானது 1920 இல் Rowntrees கம்பனி Kitcat என்னும் பண்டப்பெயருடன் சொக்லட் பெட்டிகளை அறிமுகம் செய்யும் போது தோற்றம் பெற்றது எனினும் 1930 அளவில் அத் தயாரிப்பு நிறுத்தப்பட்டது.
4 Fingers எனப்படும் finger bar கிட்கெட் சொக்லெட்டின் மூல உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டது ஓரு தொழிற்சாலை வேலையாள் ஒருவரது ஆலோசனை க்கு இணங்கவாகும் .நம்பமுடியவில்லை அல்லவா? Rowntrees கம்பனியில் வைக்கப்பட்ட ஆலோசனை/கருத்து பெட்டியில் தொழிலாளி ஒருவரால் இடப்பட்ட 'ஒருவன் தனது பையில் சிற்றுண்டிக்காக எடுத்துச் செல்ல கூடிய பொதி' என்ற சிந்தனையில் உருவாகியது தான் இந்த finger Bar ஆகும். வெளிநாட்டு நிறுவனங்கள் உற்பத்தியை பெருக்க தொழிலாளர்களிடம் கருத்துக்கள் கேட்கும் உத்திகளை கையாள்கின்றன.
1935 ஆவணி மாதம் 29 ம் திகதி இந்த 4finger bar சொக்லேட் ஆனது 'Rowntree's Chocolate Crips' என்ற பெயரில் அறிமுகமானது. 1937 இல் தலைவன் Kitkat Chocolate Crips என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டதுடன் 'Break' எனும் சொல் விளம்பர நடவடிக்கைகளில் பயன்படுத்தப்பட்டது.
Comments
Post a Comment