Break your Phone Addiction Tamil
என்ன பிரச்சினை எனக்கு வந்தாலும் அம்மா உடனே சொல்ற ஓரே வசனம் எந்த நேரமும் அந்த தொலைபேசியை கிண்டி கொண்டு இருந்தால் அப்படி தான் நடக்கும் என்பது தான், எனக்கு மட்டுமல்ல எங்களில் அனேகம் பேருக்கு இந்த அனுபவம் இருக்கும் ஆனாலும் அம்மா என்ன தான் சொன்னாலும் எங்களுக்கு கைத்தொலைபேசியை நிமிடத்திற்கு ஒரு தடவை கிண்டி பார்க்காமல் இருக்கவே முடியாது. உங்களிற்கு இன்னொரு தகவலும் இந்த நேரத்தில் பகிரலாம் என நினைக்கிறேன் சராசரியாக ஒரு நாளில் நாங்கள் 3 1/2 மணித்தியாலங்களை தொலைபேசியை பயன்படுத்துவதில் கழிக்கின்றோம், கழிக்கின்றோம் என்பதை விட தொலைக்கின்றோம் என்பது தான் மிக பொருத்தமாக இருக்கும்தூக்கம் கலைந்து முதல் பார்ப்பதும் நித்திரைக்கு போகும் போது இறுதியில் பார்ப்பதும் என்னவோ உன்னை தான்.என்ன இடையில் காதல் கவிதை மாதிரி வருகிறது என நினைக்க வேண்டாம் எங்களுக்கும் கைத்தொலைபேசிக்கும் இடையில் உள்ள உறவு அப்படி. அம்மா நச்சரிக்கும் ஒவ்வொரு நேரமும் நானும் கைத்தொலைபேசி பாவனையிலிருந்து விடுபட வேண்டும் என்று நினைப்பேன் ஆனாலும் கூடியது அரை மணி நேரம் வரை தான் தொலைபேசியை தவிர்க்க முடியுமாக இருந்தது. அதற்கு பின்பு பலவேறு இடங்களில் வாசித்தும் கணொளிகளில் பாரத்தும் சில நடவடிக்கைகளை அன்றாட வாழ்க்கையில் கைக்கொண்டதன் விளைவாக தொலைபேசி பயன்படுத்துவதை கட்டுப்படுத்த கூடியதாக இருக்கிறது. அத்தகைய சில நடவடிக்கைகளை உங்களுடன் பகிர்கின்றேன்.அறிவுரை கூறுமளவிற்கு நான் பெரிய ஆள் இல்லை என்பதுடன் இந்த விடயங்களை நடைமுறைப்படுத்தி நன்மையடைந்த ரீதியில் உங்களுக்கும் பகிர்ந்து கொள்கிறேன். உங்களுக்கு என் கருத்துகளில் உடன்பாடு இல்லாமல் கூட இருக்கலாம், நல்லது அது உங்கள் தனிப்பட்ட விருப்பம்.
பிரதியீடு
Alarm ஐ நிறுத்தவே பெரும்பாலும் நித்திரை கலைந்து எழுந்தவுடன் கைத்தொலைபேசியை எடுக்கின்றோம் ஆகையால் கைத்தொலைபேசியில் Alarm வைப்பதற்கு பதிலாக சிறிய கடிகாரம் ஒன்றை பயன்படுத்துங்கள் மேலும் உங்கள் படுக்கையறைக்கு கொண்டு செல்வதை தவிருங்கள் அதற்கு பதில் புத்தகங்கள்/ சஞ்சிகைகளை எடுத்துச் சென்று வாசிப்பதை பழக்கப்படுத்துங்கள்.இவற்றின் மூலம் Alarm நிறுத்திவிட்டு கூடவே பலவழிகளில் வந்திருக்கும் Notification ஐ காலையிலேயே பரிசீலிக்கும் பழக்கத்திலிருந்து விடுபடலாம்.
மங்கலான திரை
Mobile App icon யாவும் கண்ணை கவரும் வகையிலும் அதன் வர்ணங்கள் கவர்சியாகவும் இருக்குமாறு வடிவமைக்க பட்டுள்ளது. கலர் கலரா இருந்த தான் நமக்கு நல்ல பிடிக்குமே :) அதனால என்ன செய்யுங்க உங்கள் கையடக்க தொலைபேசி திரையை( ios and Android இரண்டிலும் திரையை மங்கலாக வைக்கும் setting உள்ளது)மங்கலாக மாற்றிவிடுங்கள்.அதனால் உங்களுக்கு சமூக ஊடகங்கள் மற்றும் தொலைபேசியை பயன்படுத்துவதில் ஊக்கம் குறைந்து விடும்.
நீண்ட கடவுச்சொற்கள்
கைத்தொலைபேசி என்பது பலவேறு விடயங்களை தேக்கி வைக்கும் ஒரு சாதனமாக மாறிவிட்டது ATM Pin code முதல் நண்பர்களின் பிறந்தநாள் வரை அதில் தேக்கி வைத்திருப்போம் அத்தகைய தனிப்பட்ட விடயங்கள் வெளியாகி விட கூடது என்பதற்காக எங்கள் தொலைபேசிகளுக்கு Password Lock வசதி செய்திருப்போம் அத்தகைய கடவுச்சொற்களை நீண்டதாக மாற்றிவிடுங்கள். நீண்ட password களை type பண்ணும் சோம்பேறித்தனத்திலேயே அதனை தவிர்த்து விட சந்தர்ப்பம் அதிகம்.இதற்கு மேலதிகமாக சமூக ஊடக கணக்குகளிற்கும் நீண்ட password ஐ பயன்படுத்துங்கள்
Silent mode
தொலைபேசியில் ஏதேனும் சத்தம் கேட்டால் அதை என்னவென்று பார்காமல் இருக்க முடியாது ஆகவே சாதரண அழைப்புகள் குறுஞ்செய்திகள் தவிர ஏனைய அனைத்து notification களையும் silent mode இல் வைத்து விடுங்கள் இதன் மூலமும் தொலைபேசியை பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை குறைக்க முடியும்இவற்றுள் எல்லாவற்றையுமோ அல்லது ஒண்டிரண்டையோ செயற்படுத்தி பாருங்கள் நல்ல விளைவுகள் கிடைக்கும்.
மாற்றம் என்பது எங்களுக்குள்ளே இருந்து வர வேண்டும் இன்னொருவர் சொல்லி மாற்றத்தை கொண்டுவர முடியாது, தொலைபேசி மீதான போதையிலிருந்து விடுபட வேண்டும் என நாங்களாக நினைக்காத வரை மேற் குறிப்பிட்ட எல்லா முயற்சிகளும் பயனற்றவையே.

Nice 👌🏽
ReplyDeleteThank you 🤞
Delete